விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.;
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதற்கு ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டம், மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.