வக்கீல்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரதம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகம் முன் தொடங்கியது.

Update: 2023-07-05 11:55 GMT

திருப்பூர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரதம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகம் முன் தொடங்கியது. உண்ணாவிரதத்துக்கு மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும். சங்கத்தின் மாநில தலைவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதில் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், இணை செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணகுமார், திருமுருகன் மற்றும் திருப்பூர், உடுமலை, காங்கயம், அவினாசி, ஊத்துக்குளி, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் பகுதி வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்