10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவசர சட்டமாக நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவசர சட்டமாக நிறைவேற்றக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது.

Update: 2022-06-06 18:14 GMT

மயிலாடுதுறை:

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவசர சட்டமாக நிறைவேற்றக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அவசர சட்டமாக நிறைவேற்றக்கோரி வன்னியர் சத்திரியர் கூட்டு இயக்கம் சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைவர் சி.ஆர்.ராஜன் தலைமை தாங்கினார். மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் சந்துரு, பல்லவர் சேனை அமைப்பின் நிறுவனர் தலைவர் பிரபுநாயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவீரன் வன்னியர் சங்க நகர செயலாளர் இளையராஜா வரவேற்று பேசினார். விஸ்வ சத்ரிய பரிஷத் மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், பா.ஜ.க. மாநில செயலாளர் வக்கீல் அஸ்வத்தாமன் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினர்.

அவசர சட்டம்

உண்ணாவிரதத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட உள்ஒதுக்கீடு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அந்த உத்தரவில் தெரிவித்துள்ளபடி சரியான தகவல்களை அளித்து தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முடிவில் வன்னிய சத்திரியர் சாம்ராஜ்ய அமைப்பின் மாநில இளைஞரணி தலைவர் செல்வா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்