தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-18 00:15 IST

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் குன்னையான். இவரது மனைவி அலமேலு (வயது 38). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அலமேலு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்