பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.;
அரியலூர் மாவட்டம் வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தீ விபத்தில் இறந்த விரகாலூரை சேர்ந்த ராசாத்தி, அரண்மனைக்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.