தி.மு.க. கொடியேற்று விழா

காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.;

Update:2023-03-20 00:15 IST

காரிமங்கலம்

காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பந்தாரஅள்ளி, அ.முருக்கம்பட்டி, இண்டமங்கலம், பெரியாம்பட்டி, கோவிலூர், அடிலம் ஆகிய ஊராட்சிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடி ஏற்று விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், துணை செயலாளர் மணி, ராஜகுமாரி, ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், குப்புசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், கவுரி திருகுமரன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் சண்முகம், சித்ரா, முன்னாள் கவுன்சிலர் சிவலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சந்திராமாதையன், நிர்வாகிகள் சென்னகேசவன், இளைஞர் அணி அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்