ஆன்லைனில் விவசாயியிடம் ரூ.42 லட்சம் மோசடி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.;
ஈரோடு மாவட்டம் செம்பூத்தாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி (44 வயது) ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் தனக்கு பெரும் லாபம் கிடைக்கும் என நம்பி, அவர் சேமித்து வைத்திருந்த ரூ.42.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர் அந்த பணத்தை எடுக்க முயன்றபோது அந்த செயலி முடக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர்.