எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்?

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கலாம் என கூறப்படுகிறது.;

Update:2026-01-07 10:28 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக–பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.  இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி இதை உறுதி செய்தார். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி  உடனடியாக  டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே எஸ்.பி. வேலுமணி டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி வந்த அமித் ஷாவை சந்திப்பதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். எனினும், எஸ்.பி. வேலுமணி அமித் ஷாவை சந்தித்து இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்