சென்னை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-03-31 07:38 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர்களிடம் இருந்த சூட்கேசில் உள்ள ரகசிய அறைகளில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள டாலர்கள், யூரோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை யாருக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்றனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்