மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.