ராமாபுரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ30 லட்சம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது

நல்லுசாமி ரூ3 0லட்சம் முன்பணம் கொடுத்து பொன்னரசியிடம் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது.

Update: 2023-02-17 10:03 GMT

போரூர்,

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது37) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ராமாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னரசி என்பவர் அறிமுகமானார் அப்போது அவர் தன்னிடம் கெருகம்பாக்கத்தில் 10ஆயிரம் சதுர அடி நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறினார். இதையடுத்து நல்லுசாமி ரூ3 0லட்சம் முன்பணம் கொடுத்து பொன்னரசியிடம் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. பின்னர் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சர்வே எண்ணை ஆய்வு செய்தபோது நிலத்தின் உரிமையாளர் அமெரிக்காவில் இருப்பதும் பொன்னரசி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்து நல்லுசாமி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பொன்னரசி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமாபுரம் போலீசில் நல்லுசாமி புகார் அளித்தார். வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் ஏற்கனவே பட்டாபிராமை சேர்ந்த கிஷோர், பாடி புதுநகரை சேர்ந்த சிவராஜ் மற்றும் ஜெயகோபி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பொன்னரசி மற்றும் வடபழனியை சேர்ந்த சத்யமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்