தொண்டு நிறுவனத்தின் பெயரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் மோசடி பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

தொண்டு நிறுவனத்துக்கு உதவும்படி கூறி ஆசாரிபள்ளம் அரசு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-18 21:11 GMT

நாகர்கோவில்:

தொண்டு நிறுவனத்துக்கு உதவும்படி கூறி ஆசாரிபள்ளம் அரசு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.50 ஆயிரம் மோசடி

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபரும், ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும், டாக்டர்களிடமும் தாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய ஏதாவது பணம் தருமாறும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி டாக்டர்களும், பயிற்சி டாக்டர்களும் பணம் கொடுத்தனர். அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை அவர்கள் வசூல் செய்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் உண்மைதானா? என்று ஆன்லைனில் பயிற்சி டாக்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கூறியது போன்ற தொண்டு நிறுவனம் எதுவும் இல்லை என்பதும், 2 பேரும் தொண்டு நிறுவனத்தின் பெயரில் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது.

பிடிபட்டனர்

அதைத்தொடர்ந்து 2 பேரையும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பிடித்து ஆசாரிபள்ளம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஆண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்