10,573 பேருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி

நெல்லை மாநகராட்சியில் 10,573 பேருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.;

Update:2022-07-16 03:15 IST

தமிழகத்தில் கொரோனா அலை மீண்டும் அதிகளவு பரவி விடாமல் தடுக்கும் வகையில் இலவசமாக பூஸ்டர் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாமை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர் ஷேக் மன்சூர், சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, மருத்துவ அலுவலர் சுகன்யாதேவி, உதவி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் முருகன், செவிலியர்கள் விஜிலா செல்வி, புஷ்பம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகராட்சியில் நேற்று 9 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10,573 பேருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்