இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update:2023-08-07 00:33 IST

அம்பை:

நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து அம்பாசமுத்திரம் இந்து தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. கிராம உதயம் சட்ட ஆலோசகர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் குழு தலைவர் கலா, ஒருங்கிணைப்பாளர் மாதவன், நிர்வாகிகள் வேலம்மாள், விஜயா, பிரேமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் மாதுரி தலைமையிலான குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் சிகிச்சை முகாமை நடத்தினர். முடிவில், கிராம உதயம் பொறுப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்