மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம்

மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம் வழங்கினர்.;

Update:2023-06-21 00:15 IST

மானாமதுரை

மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் காங்கிரஸ் கட்சியினர் வெடி வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் 53 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா, மூத்த தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சஞ்சய்காந்தி, செந்தில்குமார், கவுன்சிலர் புருசோத்தமன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிபு ரஹ்மான் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்