வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-10-25 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்தை தொடர்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

பின்னர் 11 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரக்சை பூஜை, யாகசாலை பூஜை, மூல மந்திர ஜெபம், ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல், மாலை மாற்று வைபவம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்