எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்

பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கையெழுத்து போட்டு ஆதரவு கடிதம் அளிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

Update: 2022-07-01 20:13 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியை வழி நடத்தி வந்தார். இந்த நிலையில் ஒற்றை தலைமை கோஷம் வலுவடைந்ததை தொடர்ந்து இரட்டை தலைமை முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த கட்டமாக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அது தொடர்பான பரபரப்பு இப்போதே பற்றிக் கொண்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைமை பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை கொண்டு வரும் ஒற்றை தலைமை தீர்மானம் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக தேர்வானதும் அதனை வெற்றிக் கொண்டாட்டம் போல் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கையெழுத்து போட்டு ஆதரவு கடிதம் அளிக்க வேண்டும். இதற்கான பணிகளும் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்