"பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" - சென்னை ஐகோர்ட்டு கேள்வி

பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.;

Update:2022-07-07 16:48 IST

சென்னை

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கொர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

அதன்படி, ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது. வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது.

ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடும் போது

பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும், மற்ற நிவாரணங்கள் தொடர்பான கோரிக்கைகளை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா? என்பது தான் இந்த வழக்கு என வாதிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருவரும் தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி படிவம் வழங்கப்பட்டு, அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அவர்கள் செயல்பட முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது; அன்றைய பொதுக்குழுவில் அந்த விவகாரமே எடுக்கப்படவில்லை .

எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிலும், அபிடவிட்டிலும் தன்னை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரம் கட்டி விட முடியாது என வாதிடபட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடும் போது

கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கபட கூடாது.

ஒருங்கிணைபாளர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துதற்காலிக பொது செய்லாளரை தேர்வு செய்ய திட்டம். பின்னர் நடத்தப்படும் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இன்றைய சூழ்நிலையில் ஒருங்கிணைபாளர். இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பொதுக்குழுவிற்கு தடைவிதிப்பதை தவிர வேறு நிவாரணங்களை கோரலாம். பொதுக்கூழு கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் மன்ற விஷயங்களை பின்னர் ஆய்வுசெய்து கொள்ளலாம். ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பது சிறப்பு பொதுக்குழு என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுக்குழுவில் நீட்சி அல்ல என்றும் பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இன்றைய நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை

ஓ.பன்னீர் செல்வம் மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்யவேண்டும் என வாதிடபட்டது.

பொதுக்குழு நடத்தலாம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? பொதுக்குழு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது, யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் படைத்தவர்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகாலாவதியாகை விட்டதா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

விரிவான பதில் மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்