கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருடு போனது.;
தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). இவர் சொந்தமாக வளர்த்துவரும் ஆடுகளை வீட்டுக்குவெளியே கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் தூங்கினர். அப்போது அவர்களது வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, அங்கிருந்த 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு செந்தில் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது, கதவை திறக்கமுடியவில்லை. அருகில் வசிப்பவர்கள் திறந்த விட்ட பின்னரே அவர்கள் வெளியே வந்தனர். இதேபோன்று செந்திலின் வீட்டுக்கு அருகே வசித்தவர் வீட்டில் இருந்தும் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.