தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

Update: 2022-09-23 07:20 GMT

சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து 4 ஆயிரத்து 690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று, 20 பைசா உயர்ந்து ரூ.63.20ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,200 ஆகவும் விற்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்