தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.77.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2024-01-19 04:55 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.77.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்