தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

Update: 2024-02-22 05:06 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கத்தின் விலை ஒருநாள் உயர்வதும் மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்து ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்