அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2022-12-28 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனை, நெடுஞ்சாலை துறை, யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க துணைத் தலைவர் முருகையா தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

பாலுச்சாமி, வேல்முருகன், பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேல்ராஜன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்