கிணத்துக்கடவில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம், நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஏற்கனவே அரசுக்கு வலியுறுத்தப்பட்டது இந்தநிலையில் தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிணத்துக்கடவு வட்டக்கிளை நிர்வாகி சாந்தி தலைமை தாங்கினார் அய்யா சாமி சிறப்புரையாற்றினார். முடிவில் அம்மாசை நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.