83 பேருக்கு அரசு நிவாரண உதவி

83 பேருக்கு அரசு நிவாரண உதவி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

Update: 2023-06-06 20:16 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த பகுதிகளையும், வீடுகளையும் ஆய்வு செய்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து சூறைக்காற்றால் சேதமடைந்த வீடுகள் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதத்தின் அடிப்படையில் 83 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 400 மதிப்பிலான அரசு நிவாரண உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து காந்தி மைதானம் பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் ஆர்.டி.ஓ. அனிதா (பொறுப்பு), தாசில்தார் அறிவழகன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் இளங்கோ, தனலட்சுமி அல்லிராணி, மீனாட்சி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்