"தியாகிகளுக்கான வீடு கவர்னர் மாளிகை" - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான வீடு கவர்னர் மாளிகை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.;
சென்னை,
கவர்னர் மாளிகையில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இங்கு உள்ளவர்கள் மறந்துவிட்டனர். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் 91 பேர் இருப்பதை உறுதி செய்து ஆவணங்களை சேகரித்துள்ளோம். கவர்னர் மாளிகை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான வீடு. தியாகிகளுக்காக கவர்னர் மாளிகையின் கதவு எப்போதும் திறந்திருக்கும்.
சுதந்திர போராட்ட வீரர்கள் கவர்னர் மாளிகைக்கு வந்தது கவர்னர் மாளிகைக்கே பெருமை. நாட்டிற்காக போராடியவர்களை கவுரவப்படுத்துவது என் கடமை. இனி ஆண்டுதோறும் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.