சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சியில் சுதந்திர தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பங்கேற்றார்.;

Update:2023-08-16 00:15 IST

திருவெண்காடு:

சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சியில் சுதந்திர தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பங்கேற்றார்.

கிராம சபை கூட்டம்

சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்( ஊராட்சிகள்) இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சித் துணைத் தலைவர் அனிதா பார்த்திபன் வரவேற்றார்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசியதாவது:- இந்த ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைத்திட வேண்டும். கழிவறை வசதி இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியை அணுகி நிதி உதவி பெறலாம். அயோடின் கலந்த உப்பை பொதுமக்கள் பயன்படுத்த முன் வர வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

தமிழக அரசு செயல்படுத்தக்கூடிய அனைத்து விதமான திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், ஒன்றிய கவுன்சிலர் திலகவதி சேகர் உட்பட பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக கிராம சபை தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து வாசித்தார். தொடர்ந்து வேளாண்மை துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்