மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.

Update: 2022-12-14 18:45 GMT


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்) தெரிவித்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்