கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றில் மீன்வலையில் சிக்கிய கைத்துப்பாக்கி - போலீசார் விசாரணை

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் வலையில் கைத்துப்பாக்கி சிக்கியது.

Update: 2023-08-06 10:33 GMT

கடலூர்,

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். அதேபோல் இன்று சிறுவர்கள் மற்றும் மீனவர்கள் வலைகளை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வலையில் கைத்துப்பாக்கி ஒன்று சிக்கியது. முதலில் பொம்மை துப்பாக்கி என்று சிறுவர்கள் எடுத்து பார்த்த நிலையில், பின்னர் துப்பாக்கியின் எடை அதிகமாக இருந்ததால் தென்பெண்ணை ஆற்றுக்கு எதிரே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் உடனடியாக புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புதுநகர் போலீசார் அந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி தமிழகம், புதுச்சேரி எல்லை பகுதியில் இருந்து கிடைத்துள்ளது.

இங்கு துப்பாக்கி எப்படி வந்தது; துப்பாக்கியை ஏதாவது தவறான காரியத்திற்கு பயன்படுத்திவிட்டு பின்னர் இந்த பகுதியில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்