மோட்டார் சைக்கிள் தர மறுத்தவரின் உதட்டை கடித்து கொலை மிரட்டல்

ஆரணியில் மோட்டார் சைக்கிள் தர மறுத்தவரின் உதட்டை கடித்து கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-30 19:42 IST

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் களத்து மேட்டு தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் மோகன் (வயது 22), கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர்கள் கார்த்தி, சந்தோஷ், குமார் ஆகியோருடன் மோகன் மோட்டார் சைக்கிளில் பெருமாள் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆரணி கொசப்பாளையம் உசேன் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் அருண்ராஜ் (33) என்பவர் அங்கு வந்து மோகனிடம் சிறிது நேரம் மோட்டார் சைக்கிள் கொடு என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மோட்டார்சைக்கிளை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண்ராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து மோகனை தாக்கி மோகனின் உதட்டையும் கடித்துள்ளார்.

மேலும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மோகனை நண்பர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் மோகன் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்