திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-01-25 18:45 GMT

திருச்செந்தூர்:

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மோகன் காந்தி, குமார், செல்வகுமார், வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் காமாட்சி சுந்தரம், குமாரசாமி, சின்னத்துரை உள்பட 78 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ரூ.100 கட்டணம், பொது தரிசனம் வரிசையில் வரும் பக்தர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனைக்கு பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கோவில் வளாகம், கடற்கரை போன்ற இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்