எஸ்.புதூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை

எஸ்.புதூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.;

Update:2023-04-24 00:15 IST

எஸ்.புதூர்

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இதனால் பரபரப்பாக தெரியும் முக்கிய சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் வெயிலின் தாக்கம் காரணமாக அதிகாலையில் கிளம்பி, இரவில் வீடு திரும்பி வந்தனர். இந்த நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், நாகமங்கலம், பிரான்பட்டி, தர்மபட்டி, கிழவயல் பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் மேகங்கள் சூழ்ந்து இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியே குளிர்ந்து காணப்பட்டது. கோடை வெயிலில் தவித்த மக்களுக்கு குளிரூட்டும் வகையில் தற்போது பெய்த மழை அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்