தரகம்பட்டியில் கனமழை

தரகம்பட்டியில் கனமழை பெய்தது.;

Update:2023-04-03 00:23 IST

 தரகம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியில் இருந்து 2.30 மணி வரை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இந்த மழையில் வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்