கழுகுமலையில் பலத்த மழை

கழுகுமலை பகுதியில் பலத்த மழை பெய்தது.;

Update:2023-10-15 00:30 IST

கழுகுமலை:

கழுகுமலையில் நேற்று காலை முதல் மதியம் வரை லேசாக வெயில் அடித்தது. மாலை 5 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கழுகுமலை வேத கோவில் தெரு, திருமாளிகை தெரு, நாராயணசாமி கோவில் தெரு, கறிக்கடை தெரு, ஆறுமுகம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்