நொய்யல்-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கனமழை

நொய்யல்-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது.;

Update:2023-10-09 23:53 IST

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் பாலத்துறை, நன்செய் புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணியில் இருந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் அவதி அடைந்தனர். இந்த மழையால் வாடிய பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கனமழை கொட்டி தீ்ர்த்தது. இதனால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்