வந்தவாசி
இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது.
வந்தவாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் வந்தவாசி, அம்மையப்பட்டு, வெண்குன்றம், மும்முனி, பாதிரி, இந்திரா நகர், சத்யா நகர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8.30 மணி வரை பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டனர்.