சென்னையை புரட்டி போட்ட கனமழை - 17 பேர் உயிரிழப்பு

16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன.

Update: 2023-12-05 14:22 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. 16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 6,110 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 24 அடியில் 23.45 அடியாக உள்ளது. 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்