சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார்

சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனா்.;

Update:2023-09-08 00:15 IST

இந்து மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் சாய்கமல் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் கோபி, துணைத்தலைவர் அசோக்குமார், இளைஞரணி செயலாளர் கோபி, மாணவர் அணி தலைவர் அருண், நகர செயலாளர் சுந்தர், நகர தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு கொசு, டெங்கு, மலேரியா காய்ச்சல் மற்றும் கொரோனா ஆகியவற்றை எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும், சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும், சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும், அந்த வகையில் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டும். மேலும் அவர்கள் இருவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்