இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு

நெல்லையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வை 1,061 பேர் எழுதினர்.;

Update:2022-09-11 02:58 IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. காலை, மதியம் என 2 கட்டங்களாக நடந்த இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தவர்கள் வசதிக்காக, 5 அமைவிடங்களில் 7 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 2,078 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 1,061 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 1,017 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 51.05 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 2 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களது மேற்பார்வையில் 8 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு மையத்திலும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. டவுன் சாப்டர் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, டி.என்.பி.எஸ்.சி. அலுவலர் நேரு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்