குகையில் சமணர் படுகைகளை வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் ஆய்வு

குகையில் சமணர் படுகைகளை வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-09-28 19:15 GMT

கரூர் மாவட்டம், புகழிமலையில் சமண முனிவர்கள் தங்கியிருந்த சூடாமணி குகை உள்ளது. அதில் தங்கியிருந்த சமண முனிவர்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்ட படுகைகள் மற்றும் சேர மன்னரின் கல்வெட்டுக்கள் ஆகியவை உள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள இந்த வரலாற்று சின்னங்களை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் அதன் தலைவர் கார்த்திகா லட்சுமி ஏற்பாட்டில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். தீபா தலைமையில், சங்க உறுப்பினர்கள் சமணர் படுகை மற்றும் அதை அமைத்து கொடுத்தவர்களின் பெயர்கள், தமிழ் பிராமி எழுத்தில் அமைந்துள்ள சேர மன்னரின் கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆய்வாளர் மைதிலி அதில் உள்ள தகவல்களை படித்து விளக்கமளித்தார். இதில் கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் ராஜஸ்ரீ, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்