வீட்டில் பொருட்களை திருட முயற்சி; வாலிபர் கைது

வீட்டில் பொருட்களை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-05 01:39 IST

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்மநபர், அங்கிருந்த பொருட்களையும், கண்காணிப்பு கேமராவையும் திருடிச் செல்ல முயன்றார். அப்போது ராஜேந்திரன் வந்ததால் மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கபாலிபாறையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (23) என்பவர் பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்