கார் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-07-20 00:15 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சங்கர் தனது ஓட்டலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்குகாக மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராதவிதமாக சங்கர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்