அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பயணம்

நான் முதல்வன் திட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

Update: 2023-02-27 18:45 GMT

தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில் அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி களப்பயணம் அழைத்து செல்ல ஆணையிடப்பட்டது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ள 98 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 940 மாணவ, மாணவிகள் கல்வி களப்பயணத்திற்கு 10 உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இக்கல்வி பயண நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த தகவல்கள் கல்லூரி பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கல்லூரி ஆய்வகம், கணினி அறிவியல் கூடம் உள்ளிட்டவைகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் களபயணம் மேற்கொண்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் ஸ்ரேயாசிங், கல்வி களப்பயணத்தின் வழியாக பெற்ற அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்