சக்கர பலகையில் வந்தேன்... 3 சக்கர சைக்கிளில் செல்கிறேன்...
சக்கர பலகையில் வந்தேன்.3 சக்கர சைக்கிளில் செல்கிறேன் என்று மாற்றுத்திறனாளி பெண் கூறினர்.;
கோவை புளியகுளம் அம்மன் குளத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கர பலகையில் அமர்ந்து சென்ற வாழ்க்கை நடத்தி வருகிறார். அவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமுக்கு சக்கரபலகையில் வந்தார்.
அவர் அளித்த மனுவில், காந்திபுரத்தில் நான் பூக்கடை வைத்து உள்ளேன். எனது வீடு புலியகுளத்தில் உள்ளது. நான் காந்திபுரத்துக்கு பஸ்சில் வருகி றேன். இதற்காக பஸ் நிலையத்துக்கு சக்கரபலகையில் வந்து செல்வதற்கு மிகவும் அவதிப்படுகிறேன்.
எனவே எனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.அந்த மனு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.
அதை படித்து பார்த்த அதிகாரிகள், ஜோதிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி ேஜாதியை அழைத்து 3 சக்கர சைக்கிளை வழங்கினார்.
அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் கேட்டதாக கூறினார். அவரிடம் அதிகாரிகள், விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று கூறினர்.
இதனால் மூன்று சக்கர சைக்கிளை பெற்றுக் கொண்ட ஜோதி மகிழ்ச்சியுடன் ஓட்டி சென்றார். அப்போது அவர், எனக்கு வழங்கியது போல் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை உடனுக்குடன் அதிகாரிகள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.