"இதுதான் அவனது கடைசி பயணம் என்று நினைக்கவில்லை.." கலங்கி பேசிய சைதை துரைசாமி

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

Update: 2024-02-13 17:13 GMT

சென்னை,

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரை சாமி, 8 நாட்கள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

இதன் பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பிரிசோதனை செய்யப்பட்டு, விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல், வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் சென்னை கண்ணம்மாபேட்டையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"இதுதான் அவனது கடைசி பயணம் என்று நான் நினைக்கவே இல்லை. எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் மனம் கலங்கமாட்டேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என இந்நாளில் சூளுரை கொள்கிறேன். ஒரு மகன் போனாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். இங்குள்ள அனைத்து சமூகத்தினரை சார்ந்தவர்களையும் அரசு பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை எந்த நேரத்திலும் உறுதியாக எடுத்துக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்