அவல்பூந்துறையில்ரூ.3½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை

அவல்பூந்துறையில் ரூ.3½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

Update: 2023-10-16 01:28 GMT

மொடக்குறிச்சி

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 118 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் கொப்பரை தேங்காய் முதல் தரம் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.79.79-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.09-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.60.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.74.29-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 36-க்கு ஏலம் போனது. 

Tags:    

மேலும் செய்திகள்