செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.34 சதவீத மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 86.65 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடை ந்து உள்ளனர்.

Update: 2022-06-21 07:03 GMT

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

கொரானா தொற்றுக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் பிளஸ்-2 தேர்வு நடை பெற்றது. அதே போல் 10-ம் வகுப்பு பொது தேர்வும் நடை பெற்றது. இதனையடுத்து இந்த இரு தேர்வுகளுக்கான முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 284 பள்ளிகளில் 32 ஆயிரத்து 690 பே ர் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 514

பேர். சதவீதம் 93.34. வெங்கம் பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு

இதுபோல 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை 36 ஆயிரத்து 521 பே ர் தேர்வு எழுதினர். இதில் 31 ஆயிர த்து 647 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி சதவீகிதம் 86.65. மேலும் 9 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்