10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி சிக்கினார்

கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல்10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2022-12-03 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையை சேர்ந்த் காமராஜ் மகன் மாடசாமி (வயது 40). இவர் மீது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மாடசாமி கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அதன்படி சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை சிவந்திபட்டியில் பதுங்கி இருந்த மாடசாமியை தனிப்படை போலீசார் கைது செய்து சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்