மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7.17 லட்சம் மதிப்பீலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

Update: 2023-05-09 09:14 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர். மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 580 வீதம் மொத்தம் ரூ.39 ஆயிரத்து 60 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், 75 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 580 வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 871 மதிப்பீட்டிலான விலையில்லா சலவை பெட்டிகளையும், 11 முஸ்லீம் மகளிர்க்கு சுய தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கடன் உதவியாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் எழுத்துக்களை மாற்றிக் காட்டும் எலக்ட்ரானிக் பிரெய்ல் ரீடர் என்ற கருவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவசமாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்