போடியில்சாலையோரம் பிடிபட்ட மலைப்பாம்பு

போடியில் சாலையோரம் ஊர்ந்து சென்ற பாம்பு பிடிபட்டது.;

Update:2023-03-23 00:15 IST

போடியில், தேனி சாலையில் உள்ள சாலை காளியம்மன் கோவில் அருகே நேற்று இரவு பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு ஆகும். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்